Interesting Facts

Light House: Akanānuru 256-6, அகநானூறு 256-6

நீகான் மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய.

The ships captain sails the ship looking

at the position of the lighthouse.

Toll Road:  Perumpānātruppadai 81, பெரும்பாணாற்றுப்படை 81

தடவு நிலைப் பலவின் முழு முதற் கொண்ட
சிறு சுளைப் பெரும்பழம் கடுப்ப, மிரியல்
புணர்ப்பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும்   80
உல்குடைப் பெருவழிக் கவலை காக்கும்

வில்லுடை வைப்பின் வியன் காட்டு இயவின்.

They travel on wide toll roads with their donkeys

with lifted ears and backs with deep scars,

that carry loads of pepper sacks, well balanced,  

resembling jackfruits with small segments 

that grow on the low, thick trunks of curved trees.

The forked forest paths used by merchants are

protected by those with bows.

Planets around the sun:  சிறுபாணாற்றுப்படை 242-243,Sirupānātruppadai 242-243

வாள் நிற விசும்பிற் கோள்மீன் சூழ்ந்த
இளங்கதிர் ஞாயிறு

The sun with delicate rays is surrounded by
planets, in the shining, bright sky.

Export:  Akanānuru 149, lines 7-11, அகநானூறு 149, அடிகள் 7-11

சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண் நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்  10
வளங்கெழு முசிறி

Cheran owns Musiri town,
where, causing the huge, beautiful Sulli river’s white foam
to become muddied, the fine ships of the Yavanas come
with gold and leave with pepper.

Import: Pattinappālai 192-193,

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்,
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி,
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்

Import of things from Eelam, products
from Burma, and many rare and big
things are piled up together on the wide
streets, bending the land by their weight.

Importing Horses, Pattinapālai 185, பட்டினப்பாலை 185

நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும்

Horses with lifted heads arrive by ships.   

Curved Dam and Sluice: Akanānuru 346, lines 5-9, அகநானூறு 346, அடிகள் 5-9

கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர்
காஞ்சி அம் குறுந்தறி குத்தித், தீஞ்சுவை
மென் கழைக் கரும்பின் நன் பல மிடைந்து,
பெருஞ்செய் நெல்லின் பாசவல் பொத்தி,
வருந்திக் கொண்ட வல்வாய்க் கொடுஞ்சிறை

Water flows rapidly through a strong sluice
gate of a curved dam created with effort
by farmers drunk happily with liquor, who stuck
short pieces of kānji tree wood in the ground
and blocked them with many sweet, delicate
sugarcanes, sealing off a large paddy field which
lies below!    

வல்வாய் – strong opening, strong sluice,  கொடுஞ்சிறை – curved dam

Ballots:  Akanānuru 77, lines 7-11, அகநானூறு 77, அடிகள் 7-11

கயிறு பிணிக் குழிசி ஓலை கொண்மார்
பொறி கண்டு அழிக்கும் ஆவணமாக்களின்
உயிர் திறம் பெயர நல் அமர்க் கடந்த
தறுகணாளர் குடர் தரீஇத் தெறுவச்  10
செஞ்செவி எருவை அஞ்சுவர இகுக்கும்

Like the public officials who break
the seals of the rope-tied ballot pots
and remove palm frond ballots, vultures with
red ears remove the intestines of the
fierce-eyed warriors who died in good wars.

Lost Wax Method:

Making Bronze bells using the Lost Wax Method used

Used in Thanjavur to this day:  Kurunthokai 155, lines 3-5, குறுந்தொகை 155, அடிகள் lines 3-5

மெழுகு ஆன்று
ஊது உலைப் பெய்த பகுவாய்த் தெண் மணி
மரம் பயில் இறும்பின் ஆர்ப்பச்

There are no clear sounds of bells
with wide mouths that were cast using 
wax forms in foundries, chiming in the
small forest dense with trees.

Building Skill: Nedunalvādai 72-78, நெடுநல்வாடை 72-78

மன்னனின் அரண்மனையை உருவாக்கிய முறை

……………..மாதிரம்
விரி கதிர் பரப்பிய வியல்வாய் மண்டிலம்,
இரு கோல் குறி நிலை வழுக்காது குடக்கு ஏர்பு
ஒரு திறம் சாரா அரை நாள் அமயத்து, 75
நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு,
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி,
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து, (72- 78)

Palace Construction

At mid-day when the bright,
ray-spreading sun climbed on toward
the west side and was high in the vast
sky, learned men, who had read books
on construction, noted the cardinal
directions, decided where to construct,
planted two sticks on the ground at
noon time when they did not see the
sun’s shadow fall on land, tied threads
with precision, prayed to the gods, and
built the palace with many rooms,
suitable for the well renowned king.